வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

பொன்னமராவதி, மார்ச் 5: பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். காரைக்குடியில் உள்ள வேளாண் கல்லூரி மாணவிகள், நகரப்பட்டிக்கு கள பயிற்சிக்கு சென்றனர். அங்கு ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தோட்ட கலைத்துறை வேளாண் அலுவலர்கள் கார்த்திக், சசிகலா, மாநகர காய்கறி சங்க தலைவர் ராசு, பேராசிரியர் முத்துப்பாண்டி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த களப்பணியில் மாணவிகள் ஈடுபட்டனர்.

Related Stories:

>