×

விடுதி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

 

சிவகங்கை, ஜூன் 2: சிவகங்கையில் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை விடுதி ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இளையராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரி தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர் மற்றும் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் முருகன், மாவட்ட தணிக்கையாளர் புகழேந்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராமாயி,

மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் அனுசியா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே விடுதியில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பு செயலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

 

Tags : Hostel Employees Association General Committee Meeting ,Sivaganga ,District General Committee ,Tamil Nadu Backward Classes Welfare Department Hostel Employees Association ,District President Gopal ,District Secretary ,Ilayaraja ,Tamil Nadu Government Employees Association… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...