×

திருவில்லி.யில் 2வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 4: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து திருவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் நாளாக நேற்று கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 93 சாதியினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, ஆனால் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது சமூக அநீதி என தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக மறவர் மகாசபை, மறவர் நலக்கூட்டமைப்பு, தேவர் பேரவை சார்பில் திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றுமுன்தினம் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. 2வது நாளாக நேற்றும் திருவில்லிபுத்தூர் மேட்டுத்தெரு, திருவண்ணாமலை, மங்காபுரம் ஆகிய பகுதியில் கருப்புக்கொடி கட்டி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Tags : Thiruvilli ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை