காரைக்குடியில் 7ம் தேதி தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை, ஓவிய போட்டி

காரைக்குடி, மார்ச் 5:  காரைக்குடியில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி, பொதுமக்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது என வட்டாசியர் அந்தோணிராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் வரும் 7ம் தேதி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. நமது வாக்கு நமது உரிமை, வாக்குரிமையின் அவசியம், வாக்குரிமை நம் வாழ்வுரிமை ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

கல்லூரி பிரிவு மற்றும் பொதுமக்கள் பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் 5 பரிசுகள் என 20 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.  கட்டுரை, ஓவியப் போட்டி ஒரு மணி நேரம் இருக்கும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கல்லூரிப் பிரிவில் ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு இருவர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வருவாய் ஆய்வாளர் மெகர்அலி 93612 34510, சாலை பாதுகாப்புப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ் மணிமாறன் 98424 64326 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>