திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

மதுரை, மார்ச் 5: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வரும் 9ம் தேதி மாநகர் வடக்கு, ெதற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை மூன்றுமாவடி சிஎஸ்ஐ மைதானத்தில் நடக்கிறது. இதுகுறித்த மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், “9ம் தேதி நடைபெறும் உங்கள் ெதாகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறுகிறார்.

 குடியிருப்போர் நலச்சங்கம், கட்டிடத்தொழிலாளர்கள் நலச்சங்கம், ஆட்டோ தொழிலாளர் போன்ற பல்வேறு அமைப்பினரை சந்தித்து அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை மனுக்களாக பெறுகிறார்” என்றார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, குழந்தைவேலு, பொன்.சேதுராமலிங்கம், வக்கீல் பழனிசாமி, ஜெயராஜ், முகேஷ் சர்மா, அணி அமைப்பாளர் அழகர், பகுதிச்செயலாளர் அக்ரி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>