மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பூர் மாநகரில் கொடி அணிவகுப்பு

திருப்பூர்,மார்ச்4:சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகரப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காங்கயம் ரோடு சிடிசி கார்னர் பகுதியில் நிறைவடைந்தது. கொடி அணிவகுப்பில் 90 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், போலீசார் உட்பட 570 பேர் கலந்து கொண்டனர். இதில் மாநகர துணை கமிஷ்னர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், உதவி கமிஷ்னர்கள்  வெற்றிவேந்தன், நவீன்குமார், கொடிசெல்வன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>