×

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் தூய்மை பணியாளர்களுக்கு மனஅழுத்தம் குறைக்க சிரிப்பு யோகா

நாகர்கோவில், மார்ச் 4:   மனிதர்களில் பலர் பல வழிகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வேலை பளு மற்றும் வீடுகளில் உள்ள பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்ய பலர் அறிவுரை வழங்கி வருகின்றனர். தற்போது சிரிப்பு யோகா பிரபலம் ஆகிய வருகிறது. குமரியை சேர்ந்த கண்ணன் என்பவர் சிரிப்பு யோகாவை கற்றுக்கொடுத்து வருகிறார். பெங்களூரில் ஒரு மாத காலம் பயிற்சி பெற்ற இவர் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேப்பமூடு பூங்காவில் வைத்து சிரிப்பு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். தூய்ைம பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் குமரி கண்ணன் கூறியதாவது: சிரிப்பு யோகா செய்வதால் உடலில் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.

 சிரிப்பு ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். சிரிப்பதன் மூலம் முகப்பொலிவு அதிகரித்து முகம் பிரகாசிக்கும். மேலும் முகச்சுருக்கங்கள் மறையும். வேலைத்திறன் மற்றும் மனபலம் அதிகரிக்கும். மன இறுக்கத்தால் ஏற்படும் நோய்களை சரிசெய்ய சிரிப்பு யோகா மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சிரிப்பு யோகாவினால் சுவாச உறுப்புகள் தொடர்பான நோய்கள் சரியாகும். ஜீரன உறுப்புகள் சீராக இயங்கும். சிரிப்பு யோகாவினால் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும். சிரிப்பின் மூலம் கோபம், பொறாமை, அகங்காரம் போன்ற எதிர்மறை உணர்வுகள் களையும் என்றார்.

Tags : Veppamoodu Park ,Nagercoil ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...