×

குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 16,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி கூடுதல் மருந்துகள் கொள்முதல்

நாகர்கோவில், மார்ச் 4:  குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள சுமார் 16,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16ம்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 21 ஆயிரம், டோஸ் வந்திருந்தது. இதில் 10 ஆயிரம் பேர் தற்போது ஊசி போட்டுள்ளனர். மருத்துவதுறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்டோர் தவிர கடந்த 1ம் தேதி முதல் 60 வயதை கடந்தவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 16,120 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவலின் 2ம் கட்டம் தொடங்கி இருப்பதால், தொற்று பரவலில் இருந்து இவர்களை தற்காத்து கொள்ள வசதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்கள் விருப்பம் இருந்தால், தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 11 ஆயிரம் டோஸ் கைவசம் உள்ளது. இது தவிர கூடுதலாக  10 ஆயிரம் டோஸ் வரை கேட்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துரையினர் தெரிவித்தனர்.

பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்துள்ளது. குமரி - கேரள சோதனை சாவடியில் தினமும் 300 பேர் வரை சளி மாதிரி எடுக்கப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சளி மாதிரி எடுக்கப்படுவதால், நாள் ஒன்றுக்கு 1200 ேபர் வரை சளி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தொற்று பாதிப்பு முழுமையாக குறைய மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என  சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags : Kumari district ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...