×

கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் விழிப்புணர்வு

கோவை, மார்ச் 4: கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை சார்பில் உலக செவித்திறன் நாள்  நேற்று கொண்டாடப்பட்டது.  மருத்துவமனை டீன் நிர்மலா தலைமை வகித்தார். காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை தலைவர் அலிசுல்தான் முன்னிலை வகித்தார். இதில், பிறவிலேயே காதுகேளாத குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் காக்கிலியர் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது. இந்த  குழந்தைகளுக்கு டீன் நிர்மலா நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்த குழந்தைகளுக்கு செவித்திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்கிலியர் இம்பிளான்ட் கருவி பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள், அந்த கருவி எவ்வாறு பொருத்தப்படும்? காது கேட்கும் திறனை வெளிக்கொண்டு வருவதற்காக ஒரு ஆண்டு செவிவழி பேச்சு பயிற்சி குறித்தும் விளக்கப்பட்டது. காதில் அழுக்கை நீக்குவதற்காக பட்ஸ், குச்சி, பறவை இறகு, எண்ணெய் ஊற்றுதல், டாக்டர்கள் பரிந்துரைக்கப்படாத சொட்டு மருந்து ஊற்றுதல் கூடாது என டாக்டர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினர். தவிர, காக்ளியர் இம்பிளான்ட்  கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின், காது பராமரிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் பிறவியில் காது கேளாத 6 வயதிற்குள் உள்ள குழந்தைகள்  224 பேருக்கு காக்லியர் இம்பிளான்ட் பொருத்தி, அவர்ளுக்கு செவிவழி பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Awareness ,Coimbatore Government Hospital ,
× RELATED காஞ்சிபுரம் கோயில்களை...