×

மலைவாழ் கிராம பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை

கோவை, மார்ச் 4: கோவை மலைவாழ் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் மலைவாழ் மாணவர்களின் கோரிக்கை மாநாடு ஆனைமலையில் நடந்தது. மாநாட்டில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் மலைவாழ் மாணவர்களின் கல்வி மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மலைவாழ் மாணவர்களின் உண்டு உறைவிடப்பள்ளியில் அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் காலிப்பணியிடங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மலைவாழ் கிராமங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மலை கிராமங்களில் மின்சாரவசதி, ஆரம்ப சுகாதார மையங்கள் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மலைவாழ் மாணவர்களுக்கான சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும். ஆழியார் பகுதியில் அரசு அளித்துள்ள 25 சென்ட் இடத்தில் உடனடியாக உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Tags : Indian Students' Union ,
× RELATED பெரியார் பல்கலை. துணை வேந்தர்,...