×

கோவையில் தேர்தல் பணியில் 21,500 பணியாளர்கள்

கோவை, மார்ச் 4:  கோவையில்  தேர்தல் பணிக்காக மொத்தம் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவையில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கோவையில் தேர்தல் பணியில் மட்டும் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாக்குச்சாவடிகள், ஒட்டு எண்ணிக்கை, பறக்கும் படை கண்காணிப்பு என தேர்தலில் உள்ள பல்வேறு பணிகளுக்கு கோவையில் மட்டும் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 353 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான மண்டல அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு