427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மார்ச் 4: வேலூர் மாவட்டத்தில் இதுவரை 427 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விஐபிக்கள், விவிஐபிக்கள் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி பாதுகாப்பு, விலங்கு தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்கவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் சமயத்தில் கைத்துப்பாக்கி, நாட்டுத்துப்பாக்கி வைத்திருக்ககூடாது என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். இதையடுத்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனே காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்ற 769 பேரில், நேற்று முன்தினம் வரை 427 பேர் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்தாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>