லால்குடி அருகே கோயில் விழாவில் திருவெள்ளரை கோயில் முன் குவிந்து கிடக்கும் செங்கற்கள்

மண்ணச்சநல்லூர், மார்ச்.4: திருவெள்ளரை பெருமாள் கோயில் முன் மலைபோல் குவிந்துள்ள செங்கற்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருவெள்ளரை புண்டரீகாட்ஷப்பெருமாள் கோயில். இந்த கோயிலின் முதன்மையான வாசல் என்றால் அது வடக்கு வாசல் ஒன்றுதான். வடக்கு வாசலில்தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது. வடக்கு வாசலில் உள்ள ராஜகோபுரம் முற்றுப்பெறாமல் உள்ளதால் ராஜகோபுரத்தை கட்டுவதற்கு அறநிலையத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 24.2.2017 முதல் ராஜகோபுர பணிகளுக்காக வடக்குவாசல் அடைக்கப்பட்டது.

இதனால் கிழக்கு வாசல் வாயிலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பணிகள் முடிவுற்ற நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 18ம் தேதி வடக்குவாசல் திறக்கப்பட்டது. வடக்குவாசல் திறக்கப்பட்டதும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு முன் கட்டுமானப்பணிகளுக்காக ஏராளமான செங்கல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த செங்கல் ராஜகோபுரம் முன்பாக உள்ளதால் கோயிலின் அழகு கெடுவதுடன் பக்தர்களுக்கும் சிரமமாக உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெருமாள் கோயிலில் தேரோட்டம் விழா தொடங்கும். குறிப்பாக கருடசேவை நாளில் கோயில் முன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நிற்பார்கள்.

அவ்வாறு வரும் பக்தரக்ளுக்கு கோயில் முன் கொட்டப்பட்டுள்ள செங்கல்கள் சிரமத்தை கொடுக்கும். எனவே உடனடியாக அந்த செங்கற்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெள்ளரை பெருமாள் கோயில் பிரதான வாயிலான ராஜகோபுரம் முன் கொட்டப்பட்டுள்ள செங்கற்கள்.

Related Stories:

More