தென்காசி மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்காசி, மார்ச் 4: தென்காசி மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளை 13வது அமைப்பு  புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணையாளராக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணை தேர்தல் ஆணையராக நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கன்னியாகுமரி நாகராஜன் ஆகியோர் செயல்பட்டனர்.இதில் தென்காசி மாவட்ட தலைவராக ரமேஷ், துணைத்தலைவர்களாக ராஜன்ஜான், செல்வராஜ், ஜாஹிரா, செயலாளராக மாரிமுத்து, துணை செயலாளர்களாக கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், லட்சுமி, பொருளாளராக மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினராக

ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினராக மாடசாமி, துரைராஜ், தென்காசி கல்வி மாவட்ட தலைவராக சுதர்சன், செயலாளராக ராஜ்குமார், சங்கரன்கோவில் கல்வி மாவட்ட தலைவராக மாணிக்கம், செயலாளராக சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை பேரமைப்பின் மாநில செயலாளர் முருகேசன், நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ், நெல்லை கல்வி மாவட்ட தலைவர் சாமி அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்தினர்.

Related Stories:

>