வைகுண்டம் தொகுதியில் காங். சார்பில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ் விருப்ப மனு தாக்கல்

ஏரல், மார்ச் 4: வைகுண்டம் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ் விருப்ப மனு அளித்தார்.

 தமிழக சட்ட மன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் அனைத்து கட்சிகளும் மனு பெற்று வருகின்றன.   காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் வைகுண்டம் தொகுதியில் போட்டியிட நேற்று விருப்ப மனு வழங்கினார்.

Related Stories:

>