×

உடன்குடி, சாத்தான்குளத்தில் நாளை மறுதினம் மின்தடை

உடன்குடி, பிப். 4: திருச்செந்தூர் மின் வாரிய விநியோகப் பொறியாளர் பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  உடன்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுதினம் (6ம் தேதி) நடக்கிறது. இதன்காரணமாக உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட் டிணம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (6ம் தேதி) காலை 8மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இதே போல் சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலையங்களிலும் நாளை மறுதினம் (6ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேச புரம் பகுதியிலும், நாசரேத் துணை மின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை,

நெய்விளை, வெள்ளமடம், ஏழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்த ருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் பழனியப்பபுரம் உப மின்நிலையத்தைச் சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் வரும் 6ம் தேதி காலை 8மணி முதல் மதியம் 1 மணி வரை  மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Udankudi ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...