×

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவிப்பு

 

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இறுதியில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலகி, டி.கே.சிவகுமாருக்கு விட்டு கொடுக்கும் முடிவு எடுத்ததாக தெரியவருகிறது. கட்சி தலைமையின் முடிவை ஏற்று கொள்வதாக சித்தராமையா உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை முதல்வர் சித்தராமையா தான் ஏற்கனவே கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். பெங்களூரு விதானசவுதா வளாகத்தில், நேரு நினைவு தினத்தில் மட்டும் கலந்து கொண்டு, மலரஞ்சலி செலுத்தினார்.

பிறகு தனது அரசு இல்லமான காவிரியில் தங்கி இருந்தார். இதனிடையில் முதல்வர் சித்தராமையா அலுவலகத்தில் இருந்து ஆளுரின் மக்கள் பவனுக்கு கடிதம் அனுப்பி சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, பெங்களூரு காவிரி இல்லத்தில் உள்ள வீட்டில், இன்று காலை சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட அமைச்சர்கள், கட்சி சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கு கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கடந்த 2023 மே மாதம் முதல் சித்தராமையா கர்நாடக முதல்வராக இருந்து வருகிறார்.

Tags : Sidharamaiah ,Chief Minister of ,Karnataka ,Bangalore ,Siddaramaiah ,Chief Minister ,Delhi ,Vice Principal ,D. K. Shivakumar ,
× RELATED சோனியா, ராகுலை சந்திக்காமல்...