×

மயங்கி கிடந்த முதியவர் சாவு

ஈரோடு, மே 28: ஈரோடு காவிரி சாலை அம்மா உணவகம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இறந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Erode ,Amma Canteen ,Cauvery Road, Erode ,Erode Government Hospital ,
× RELATED அரசு நவீன நூலகத்தில் கோடைகால முகாம் நிறைவு