×

கலெக்டர் தகவல் தா.பழூர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை

தா.பழூர், மார்ச் 4: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தா.பழூர், இடங்கண்ணி, சிந்தாமணி, தென்கச்சி பெருமாள்நத்தம், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, இருகையூர், காடுவெட்டான்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 23வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணியின் ஊராட்சி, பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய கழக செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூசைராஜ், தமிழ்செல்வன், நாகராஜன், எழிலரசி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், கண்ணதாசன், ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகைகுமரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜெயசெந்தூரன் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,East Union Office, Dhaka ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்