×

நூற்றுக்கணக்கானோர் நேர்த்திகடன் அரியலூர் மாவட்டத்தில் மதுகடத்தல் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்

அரியலூர், மார்ச் 4: தமிழக சட்டமன்ற பேரவை பொதுதேர்தல்-2021 அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையை தடுப்பதற்காகவும், மதுபானக்கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் கடத்தல், பதுக்கல் மற்றும் சட்டவிரோதமான விற்பனை போன்ற மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் டாஸ்மாக் உதவி மேலாளர்(சி.வி.) பாரதிவளவனை 97875 07177 என்ற எண்ணிலும், பறக்கும்படை அலுவலரான டாஸ்மாக், உதவிமேலாளர் (கணக்குகள்) கார்த்தி 91235 55728 என்ற எண்ணிலும்,. இளநிலை உதவியாளர்கள் உதயகுமார் 98942 36840 என்ற எண்ணிலும், முத்துவேல் 83442 25319 என்ற எண்ணிலும், தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் சட்ட விரோத மதுபான விற்பனை, மதுபான கடத்தல் தொடர்பான புகார்களை மேற்படி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Nerthikadan Ariyalur district ,
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்