×

துப்புரவு தொழிலாளர்கள் முடிவு திருமானூர் ஒன்றியத்தில் மழையால் பாதித்த நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்


அரியலூர், மார்ச் 4: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி பரதூர் விவசாயிகள் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்தில் எடுக்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மறுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடையான நெல்லை எடுக்க மறுப்பதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கரைவெட்டி பரதூர் கிராமத்திற்கே நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.


அம்மனுவில், கரைவெட்டி பரதூர் கிராமத்தில் அறுவடையான ஏறத்தாழ 20 ஆயிரம் மூட்டைகளையும் உடனடியாக எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு அனுமதி கொடுத்து நெல்லை எடுக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். அதே போல சிறப்பு அனுமதி பெற்று அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில் மனு அளித்து கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதி தங்கமலை, கரைவெட்டி பரதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், முன்னாள் ஊ.ம.துணை தலைவர் செல்லப்பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags : Thirumanur ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி