×

அரியலூர், திருமானூர், கீழப்பழுவூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

அரியலூர், மார்ச் 4: அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் நகர சமுதாய திடலில் ஆரம்பித்து பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் ஆகிய இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், அரியலூர் டிஎஸ்பி திருமேனி, மத்திய ஆயுத காவல் படை உதவி ஆணையர் பக்ரீத் லாலா, அரியலூர் உட்கோட்ட டிஎஸ்பி மதன், காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் இக்கொடி அணிவகுப்பை வழிநடத்தி சென்றனர். ஆயுதப்படை உதவி ஆய்வாளர், துணை ராணுவ படையினர் 90 பேர் மற்றும் ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பின் போது நடைபெற உள்ள தேர்தலில் அசம்பாவிதங்கள், வன்முறைகள் ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தமிழக காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், கூடுதல் பாதுகாப்பிற்காக தங்களுடன் மத்திய பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவ படையினரும் தேர்தல் பணி ஆற்ற உள்ளனர் என்பதையும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் காவல்துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை துணை சூப்பிரண்டு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் ஊர் காவல் படையினர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தா.பழூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

Tags : Ariyalur ,Thirumanur ,Keelappaluvoor ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி