சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் பட்டியலின மக்களுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாகவும் வீடு ஒதுக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் தலையீடு காரணமாகவே ஜாதி பாகுபாடு என புகார் கூறப்படுகிறது.
அனைத்து சமூகத்தினருக்கும் குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு
செய்வதே பொதுவான நடைமுறையாகும். குலுக்கலில் முறைகேடு செய்து பட்டியலின மக்களுக்கு தனிப் பகுதி ஒதுக்கீடு என புகார் எழுந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக தனித்தனியாக குலுக்கல் நடத்தியது ஏன் என பொதுமக்கள் கேள்வியெழ்ய்ப்பிவருகின்றனர்.
வீடு ஒதுக்குவதில் இதுவரை இல்லாத புதிய நடைமுறையை தவெக கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததை போன்று குலுக்கல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர். திட்டமிட்டு வீடு ஒதுக்குவதில் ஜாதி பாகுபாடு காட்டுவதாக தவெக அரசுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
