×

சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர பெருவிழா தேரோட்டம்

சீர்காழி, மார்ச் 4: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர பெருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா–்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியது. மேலும் நவக்கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலில் இந்திர பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழா நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி விநாயகர், முருகன், பிரம்ம வித்யாம்பிகை உடனான சுவேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் மூன்று தேரில் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைதொட்ந்து வடம் பிடித்து தேரை சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். செயல் அலுவலர் முருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலசுப்பிரமணியன், தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய பொருளாளர் பாண்டியன், கோயில் நிர்வாகி சிவானந்தம் ஊராட்சி செயலாளர் கார்த்திக் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Indra Peruvija Therottam ,Swetharanyeswara Temple ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ