சீர்காழியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

சீர்காழி, மார்ச் 4: சீர்காழியில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 60 பேர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா தலைமையில் பயிற்சி டிஎஸ்பி ஜனனி பிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். சீர்காழி காவல் நிலையத்தில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

Related Stories:

>