குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

குளித்தலை, மார்ச்4: குளித்தலை- மணப்பாறை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுனர். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி நேற்று குளித்தலை தொகுதிக்குட்பட்ட குளித்தலை- மணப்பாறை சாலையில் தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்த் தலைமையில் மணப்பாறை ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது யாரேனும் அனுமதியின்றி பணம் எடுத்துச் செல்கிறார்களா? அன்பளிப்புப் பொருட்கள் ஏதேனும் வாகனத்தில் செல்கிறதா? என்ற சோதனை செய்த பின்னரே வாகனங்களை அனுப்பி வைத்தனர். ஒருசில வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால் அவர்களை அனுப்பி வைத்தனர்.

வணிகர்கள் சென்ற தேர்தலில் விழிப்புணர்வு இல்லாமல் பணம் கொண்டு போய் பறக்கும் படையினர் பிடிபட்டதால் இந்த சட்டமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு அவர்கள் பெரும்பாலானோர் தங்களுடைய வர்த்தகத்தை வங்கி மூலமே முடித்துக் கொள்வதால் இந்த முறை வாகன சோதனையில் ஆவணம் இன்றி எடுத்து வரும் பணங்கள் கைப்பற்றுவது அரிதாக இருந்து வருகிறது. அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில் அதிரடியாக வாகன சோதனை செய்து சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணம் மற்றும் பரிசுப் பொருகள் வாகனங்களில் கொண்டு செல்ல தடுத்து பறிமுதல் செய்வதற்காக6 பறக்கும்படை குழுவினர், 6 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு ஆங்காங்கே பல்வேறு சாலை சந்திப்புகள், கரூர் திண்டுக்கல், வேலன் செட்டியூர் சுங்கச் சாவடி பகுதி,கருர் கோவை’ திருச்சி நெடுஞ்சாலை, உள்ளார்ந்த கிராம சாலைகளில் இரவு பகலாக அதிரடி தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>