×

தவெக ஆச்சரியக்குறிகளே! அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில்

சென்னை: அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில் அளித்துள்ளது. இது குறித்து தெரிவித்திருப்பதாவது; தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!

தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி மற்றும் பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.

கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க. ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க .. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்.. என அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.

Tags : Thaveka ,AIADMK ,IT Wing ,Chennai ,AIADMK IT Wing ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்..!