முன்னாள் மாணவர் வழங்கினார் அரவக்குறிச்சி பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

அரவக்குறிச்சி, மார்ச்.4:கிராமப் பகுதியில்அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி தடுப்பூசி போட்டு கொள்பவர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதரத் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் முதல் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் 37 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று 400க்கும் மேற்பட்ட வர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.முதல் தவணை போட்டபின் 28ம் நாளில் இரண்டாம் தவணை என மொத்தம் இரண்டு தவணை போடப்படுகின்றது.

இதன் படி மார்ச் 1 முதல் பொதுமக்களில்45 வயதுக்கு மேற்பட்ட.. நீரிழிவு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய இணை நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்அரவக்குறிச்சியை வட்டாரத்தில்மலைக்கோவிலூர், குரும்பபட்டி ஈ.சநத்தம் அரசு வட்டார சுகாதார நிலையம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம்,வாங்கல், உப்பிடமங்களம், பஞ்சப்பட்டி, கானியாளம்பட்டி, தோகைமலை, இனுங்கூர் உள்ளிட்டஉள்ளிட்ட மாவட்டத்தில் 37 அரசு சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது. நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டு கொள்பவர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிராமங்களில் முதியவர்வர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் கொரோனாதடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி போட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி வருவது இயல்பான ஒன்று. பயப்படத் தேவையில்லை, இந்த நிலையிருந்தால் தான் தடுப்பூசி உடலில் வேலை செய்கின்றது என்று அர்த்தம் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>