திருவில்லிபுத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்புக்கு டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமை வகித்தார். இதில் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகர் காவல் நிலையத்தில் இருந்து துவங்கி சின்னக்கடை பஜார் பஸ்நிலைய பகுதி, நான்கு ரத வீதிகள் என முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடந்தது.

Related Stories:

>