×

போடி அணைக்கரைப்பட்டியில் சாலையில் கிடக்கும் சக்கையால் விபத்து அபாயம்

போடி, மார்ச் 4: போடி அருகே அணைக்கரைப்பட்டி, துரைராஜ்புரம் காலனி, மீனாட்சிபுரம், தீர்த்தத்தொட்டி, தோப்புப்பட்டி, கோடங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மழை, கிணற்று நீர் மற்றும் கொட்டகுடி ஆற்று பாசனத்தின் வாயிலாக ஆலை கரும்பு விவசாயம் செய்தனர். தற்போது கரும்பு நன்கு விளைந்த நிலையில் அறுவடை பணியில் ஆங்காங்கே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கரும்புகளை வெட்டி விற்பனைக்கு அனுப்ப கட்டுகளாக கட்டி வருகின்றனர். மேலும் அணைக்கரைப்பட்டி பகுதியில் வெல்லப்பாகு காய்ச்சும் பணியும் நடக்கிறது.

இதற்காக கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாருக்கு பின் சக்கை கழிவுகளை அணைக்கரைப்பட்டி மெயின்ரோட்டில் குவித்து பாத்தி வருகின்றனர். இந்த கரும்பு சக்கையால் சைக்கிள், டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரும்பு சக்கைகளை போக்குவரத்து நடமாட்டம் இல்லாத பகுதியில் பரத்தி காய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodi dam ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு