கம்பம், கூடலூர் வனத்துறை சார்பில் உலக வன உயிர்கள் தினம்

கம்பம், மார்ச் 4: அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக வன உயிர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று கம்பம், கூடலூர் வனத்துறை சார்பில் உலக வன உயிர்கள் தினத்தை முன்னிட்டு சுருளியாறு மின்நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. வன விலங்குகளை காப்போம். காட்டுத் தீயினை தடுப்போம்.

மரங்கள் வளர்ப்போம் என வனத்துறை முன்னிலையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் கம்பம் கிழக்கு சுரேஷ்குமார், மேற்கு அன்புக்குமார், கூடலூர் அருண்குமார், கால்நடைத்துறை டாக்டர் செல்வம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>