×

சின்னமனூர் அருகே டூவீலர் திருட்டு

சின்னமனூர், மார்ச் 4: சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டி ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சின்னமனூருக்கு வந்தார். பின்னர் தனியார் மருத்துவமனை அருகே டூவீலரை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் அக்கம்பக்கத்தில் தேடி கிடைக்காததால் சின்னமனூர் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி