தேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு

தேவகோட்டை, மார்ச் 4:  தேவகோட்டை கைலாசநாதபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கஸ்தூரி. 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். மகன், மகள் உள்ளனர். சங்கர் தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கிறார். கணவன்,மனைவிக்குள் நீண்ட காலமாக அடிக்கடி சண்டை இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் கோபித்து கொண்டு கஸ்லூரி தாய் வீட்டிற்கு செல்வார். பெற்றோர் சமாதானப்படுத்தி கணவனோடு சேர்த்து வைப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி கஸ்தூரி எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். தேவகோட்டை டவுன் போலீசார், அவரது உடலை தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஸ்தூரியின் அண்ணன் சங்கர் கொடுத்த புகாரின் பேரில், கஸ்தூரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: