கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்

பரமக்குடி, மார்ச் 4: பரமக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொட ர்ச்சியாக நடைபெற முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Related Stories:

>