திருப்பரங்குன்றத்தில் அழிக்கப்படாத அதிமுக விளம்பரங்கள்

திருப்பரங்குன்றம், மார்ச் 4: திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினரின் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பாக அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் அதிமுகவினரின் கொடிகள், பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

அதேபோல் ஒரு சில இடஙகளில் அதிமுகவினரின் கட்சி சின்னம் அழிக்கப்படாமல் உள்ளது. ஒரு சில அரசு கட்டிடங்களிலும் அதிமுக கட்சி வண்ணங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதை அதிகாரிகள் அழிக்க தயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் பாரபட்சமின்றி பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் உள்ள அதிமுக கட்சி கொடிகள், பேனர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>