×

இந்திய தேசிய லீக் திமுகவுக்கு ஆதரவு

மதுரை, மார்ச் 4: இந்திய தேசிய லீக் (அப்துல் லத்தீப் பிரிவு) மாநில செயற்குழு கூட்டம், மதுரை கே.புதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநிலத்தலைவர் முகம்மது ஹூசைன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் திருப்பூர் முபாரக் ராஜா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஹூமாயின் கபீர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஜமீன்தார், மாநில அமைப்புச்செயலாளர் சுல்தான் அலாவுதீன் சேட், மாநில துணைச்செயலாளர் கலீல் ரஹ்மான், மாநில இளைஞரணி தலைவர் சையது முகம்மது கவுஸ், மாநில இளைஞரணி செயலாளர் சிக்கந்தர் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது, இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பராமரிப்பு நிதி வழங்க வேண்டும். தேர்தல் முடிவுகளை 24 மணி நேரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தலைவர் சாதிக் நன்றி கூறினார்.

Tags : Indian National League DMK ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...