×

கோயில் சிலைகளை அகற்ற எதிர்ப்பு வேடசந்தூர் அருகே பரபரப்பு

வேடசந்தூர், மார்ச் 4: வேடசந்தூர் அருகே பூதிப்புரத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூதிப்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யாததால் கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று இக்கோயிலில் உள்ள பழமையான சிலைகளை எடுத்து செல்ல அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, கோயிலில் உள்ள சிலைகளை அகற்ற கூடாது எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோயிலில் உள்ள பழமையான 6 சிலைகளை அகற்றினால் அதை பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும், கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் முன்வைத்தனர். இதை ஏற்று அதிகாரிகள் சிலைகளை அகற்றி பூசாரி வீட்டில் வைத்தனர்.

Tags : Vedasandur ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது