×

கட்டனாச்சம்பட்டியில் மின்விளக்குகள் அமைப்பு

நாமகிரிப்பேட்டை, மே 25: வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள கட்டனாச்சம்பட்டியில், கம்பங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருந்த நிலையில், தினகரன் செய்தி எதிரொலியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ரேஷன் கடை அருகில், தெரு மின்விளக்குகள் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மின் கம்பம் அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் விளக்கு இல்லாமல் இரவு நேரங்களில் மக்கள் இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேலும், இரவு நேரங்களில் விஷப்பாம்புகள் மற்றும் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இது குறித்து கடந்த 19ம் தேதி, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து கட்டனாச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய மின்விளக்கு அமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். `

 

Tags : Kattanachampatti ,Namakiripettai ,Vennandur union ,Dinakaran ,
× RELATED தலைமை மருத்துவமனை இறுதி கட்ட பணிகள் தீவிரம்