×

வனஉரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் கொடைக்கானல் ஆதிவாசி மக்கள் கோரிக்கை

கொடைக்கானல், மார்ச் 4: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆதிவாசி மக்களான பளியர், புலையன் இன மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே எஸ்டி பட்டியலில் இருந்த நிலையில் தற்போது எஸ்சி பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். இதை கண்டித்து இவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனி மலை ஆதிவாசி கூட்டமைப்பு சார்பாக மூலையாறு கிராமத்தில் பளியர், புலையர் இன மக்களின் தேர்தல் அறிக்கை கோரிக்கை வெளியிடும் நிகழ்வு நடந்தது.

பின்னர் கூட்டமைப்பு செயலாளர் நாகபாண்டி கூறுகையில், ‘கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பளியர், புலையர் இன மக்களை மீண்டும் எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும். 2006ம் ஆண்டு வனஉரிமை சட்டத்தின்படி ஆதிவாசி மக்கள் பயன்படுத்தும் வன நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் வனமகசூலை ஆதிவாசி மக்களே எடுத்து கொள்ள இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இதையும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் லீலாவதி, ஆதிவாசி விடுதலை இயக்க தலைவர் சுருளிநாதன், புழையன் முன்னேற்ற சங்க தலைவர் சேகர், செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்