ஈரோடு, மே 25: பெருந்துறை அருகே பணம் வைத்து சீட்டாட்டிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை அடுத்த கரண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், விசாரித்தனர்.
அதில், அதேப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் (41), ராதாகிருஷ்ணன்(54), பாலாஜி (32), சாலமன்(38), விமல்ராஜ்(36), தினகரன்(28), வினோத்குமார்(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், சீட்டு கட்டுகள், ரூ.21 ஆயிர்த்து 210யை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, கரண்டிபாளையம் அருகேயுள்ள மேல்காடு பகுதியில் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட, அதேப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை(48), கருப்பண்ணசாமி(59), நாகராஜ்(56), பாஸ்கர்(58), கனகராஜ்(38) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், சீட்டுக்கட்டுகள், ரூ.19 ஆயிரத்து 760யை பறிமுதல் செய்தனர்.
