×

பழநி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

பழநி, மார்ச் 4: பழநியில் நடந்த மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்.12ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி திருக்கம்பம் சாட்டுதல், 23ம் தேதி கொடியேற்றம்- பூவோடு வைத்தல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு பாதிரிபிள்ளையார் கோயிலுக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடந்தது. பகல் 2 மணிக்கு திருக்கண் திறத்தல் நடந்தது. மாலை மாலை 4.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு ரத வீதியில் துவங்கிய தேரோட்டம் முறையே தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதி வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தொடர்ந்து வண்டிக்கால் பார்த்தல் நடந்தது. நிகழ்ச்சியில் பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி, செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் எஸ்ஜி ராகவன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அடிவாரம் வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் சொர்ணரத ஊர்வலம் நடந்தது. ஒளிரும் வெண்கற்கள்- மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பாதவிநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் சன்னதி வீதி, பாளையம் சாலை, பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி வழியாக மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. ஊர்வலத்தை டிஎஸ்பி சிவா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் செல்வக்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், சங்க நிர்வாகிகள் முருகானந்தம், விஏபி குமார், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani Mariamman Temple ,Masi Therottam ,
× RELATED பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா திருக்கல்யாணம்