×

கோவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது: தமிழிசை கடும் கண்டனம்

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது. மிருகங்களால் எத்தனை பூக்கள் கசக்கி வீசப்பட போகின்றனவோ. இப்பொழுது தமிழகத்தில் சென்ற ஆட்சியில் நடந்த அவலங்களின் தொடர்ச்சியாக இன்று நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

ஆக பெண்களின் பாதுகாப்பில் குழந்தைகளின் பாதுகாப்பில் தீவிர நடவடிக்கை என்பதை விட போர்க்கால நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது. காவல்துறையும் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண்கள் படையும் எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற போர்க்கால நடவடிக்கை தேவை. ஒரு போரின் தீவிரத் தன்மையும் தேவை… இன்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது கோவை பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல பெண்ணை பெற்றோர் ஒவ்வொருவரும் கூட. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Tamilisai ,Chennai ,Tamil Nadu ,BJP ,Tamil Nadu… ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...