×

ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை மீண்டும் மறைப்பு

கெங்கவல்லி, மார்ச் 4: கெங்கவல்லியில் எம்ஜிஆர், ஜெயலலிதா  சிலைகளை மறைத்து கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்ட நிலையில், அதிகாரி எச்சரிக்கையால் மீண்டும் கட்டி மறைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகள், துணிகள் வைத்து மறைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் உருவச்சிலையை மறைத்து கட்டப்பட்டிருந்த துணிகளை அதிமுக நிர்வாகிகள் அகற்றினர்.

இதுகுறித்து கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் விதி அமலில் உள்ளதால் சிலையை மறைப்பது கட்டாயம். தேசிய தலைவர்களின் உருவச்சிலையை மறைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, மாநில தலைவர்களின் உருவ சிலைகளை மறைத்து கட்டியிருந்த துணியை அகற்றியது விதி மீறிய செயல் என தெரிவித்தார்.
மேலும், சிலைகளை மூடுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அகற்றப்பட்ட துணிகள் மீண்டும் கட்டப்பட்டு, சிலைகள் மறைக்கப்பட்டது.

Tags : Jayalalithaa ,MGR ,
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...