×

சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

நாமக்கல்,  மார்ச். 3: நாமக்கல்லில் சட்டமன்ற தேர்தலையொட்டி, துணை ராணுவ படை வீரர்கள்  மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. காவல்  நிலையத்தில்  துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.  ஊர்வலத்துக்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படை வீரர்கள் 50 பேர்  பங்கேற்றனர். மேலும், நாமக்கல் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும்  போலீசாரும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த கொடி  அணிவகுப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவும்,  இதேபோல் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Assembly elections ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா