திருப்பூர்: காண்டூர் பச்சை தண்ணி என்னும் இடத்தில் கால்வாயில் தவறி விழுந்து காட்டு யானை உயிரிழந்தது. கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, வனத்துறையினர் மீட்க முயன்ற நிலையில் யானை உயிரிழந்தது. கால்வாயில் விழுந்து உயிரிழந்த யானையின் உடல் 30 கி.மீ. வரை மிதந்து வந்து திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது.
