சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியர் குண்டாசில் கைது

பென்னாகரம், மார்ச் 4: பென்னாகரம் அடுத்த பூச்சட்டிஅள்ளியை சேர்ந்த 9வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 1ம் தேதி இரவு 7மணியளவில், உறவினரிடம் பூ கொடுத்து விட்டு வருமாறு சிறுமியிடம் அவரது தாய் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி பூவை வாங்கிக்கொண்டு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒஜிஅள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் கணேசன்(55) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, கணேசனை அன்று இரவே கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் மாவட்ட எஸ்பி பிரவேஸ்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கார்த்திகா உத்தரவின் பேரில், கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Related Stories:

>