×

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: மின்தடை பிரச்சனையை சரி செய்ய கடந்த இரண்டு நாட்களாக மின்சார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கெல்லாம் தவறு நடைபெறுகிறது என்று கண்டறிந்து சரி செய்து வருகிறோம் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது . உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதில் தனிநபர்கள் மீது தவறு இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

ஒரு சிலர் தனி நபர்கள் யாருடைய தூண்டுதலின்பேரிலோ இதைச் செய்கிறார்கள் என்ற கருத்துகள் நிலவுகின்றன. 99% சிறப்பாக செயல்படும் மின்சாரத் துறை ஊழியர்கள் மத்தியில் உள்ள 1% கருப்பு ஆடுகளை கண்டறிவோம். மின்சாரத்துறையை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இது முடிவதற்கு சில மாதங்கள் ஆகலாம். இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Nirmal Kumar ,Chennai ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான...