தேஜஸ் நின்று செல்ல தடைவிதிப்பதா? கொடைரோடு ஜங்ஷன் முற்றுகை டாக்சி டிரைவர்கள் ஆவேசம்

வத்தலக்குண்டு, மார்ச் 3: கொடைரோடு ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு ஏப்.4ம் தேதி முதல் கொடைரோடு ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நிற்காது என அறிவித்தது. இதை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெற கோரியும் நேற்று கொடைரோடு டாக்சி ரோடு டிரைவர்கள் சங்க தலைவர் அன்பு தலைமையில் செயலாளர் பாண்டி, பொருளாளர் முரளி, நிர்வாகிகள் சசிகுமார், சரவணன், கார்த்தி மற்றும் பலர் கொடைரோடு ரயில்நிலையத்தை முற்றுகையி–்ட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தென் குறிப்பாக வடமாவட்டங்களில் இருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கொடைரோடு ரயில் நிலையம் வந்து பின்னர் கார் அல்லது பஸ் மூலம் கொடைக்கானல் செல்கின்றனர். மேலும் கொடைரோடு பகுதியில் விளையும் பழங்கள், பூக்கள் மற்றும் பள்ளபட்டி சிப்காட் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் யாவும் ரயில் மூலமே அனுப்பப்படுகிறது

இதற்கு தேஜஸ் ரயில் கொடைரோட்டில் அவசியம் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் எங்கது வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு கொடைரோடு ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நிற்காது என வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்’ என்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: