×

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரவல் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : 717 Tasmak ,stores ,Tamil Nadu ,Chennai ,717 Tasmak stores ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை!