×

இன்று முதல் பகல் 12 மணிக்கு வழங்கப்படும் மீனாட்சியம்மன் கோயிலில் அன்னதானம்

மதுரை, மார்ச் 3: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் பகல் 12 மணிக்கு அன்னதான பொட்டலம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கையொட்டி, அன்னதான திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், கடந்த மாதம் முதல் காலை 8 மணிக்கு 300 பேருக்கு ‘வெரைட்டி ரைஸ்’ உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.  இதற்கு பதிலாக பகல் 12 மணியளவில் உணவு வழங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று இன்று முதல் பகல் 12 மணியளவில் கோயில் அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. விரைவில், இலை போட்டு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Annadanam ,Meenakshiamman Temple ,
× RELATED வாறுதட்டு நாகராஜா கோயில் திருவிழா நாளை தொடக்கம்